10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 உள்ளிட்ட அரசு பொதுத்தேர்வுகள் அனைத்துக்கும் மாணவர்கள் டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கும் வகையில் இணையதளத்தில் விண்ணப்பபடிவம் வெளியிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், பிளஸ்2 ஆகிய தேர்வுகளை தனியாக படித்து தேர்வு எழுதுபவர்கள், பள்ளியில் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க சென்னையில் உள்ள அரசு தேர்வுத்தறை அலுவலகம் அல்லது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் படிவங்களை இதுவரை பெற்று வந்தனர்.
அப்படிப்பட்ட நாட்களில் விண்ணப்பம் வழங்கும் கடைசி நாளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல சிரமங்கள் ஏற்படுவது உண்டு. அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் காத்து கிடக்கவேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் ஏற்பாட்டில் 10ஆம் வகுப்பு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், பிளஸ் 2 தேர்வு உள்பட அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை http://www.tn.gov.in.dge என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.