கோடிக்கணக்கான மக்கள் நம்பும் ராமர் பாலத்தை பாதுகாப்பதும் ஒரு பெருமையான செயல். இது மதவெறி அல்ல என்று தமிழக பா.ஜ. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகு காந்திய வழி நினைவுக்கு வந்ததால் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். வாய்ப்பிருந்தால் வன்முறை, வழியில்லையேல் அகிம்சை முறை என்பது உண்மையான அகிம்சைப் பாதையல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
மதவெறியை தூண்டுவதாக அதிலே பொறுப்பானவர்கள் பேசியுள்ளனர். இங்கே மதம் அல்லது மத பேதம் அல்லது மதவெறி எங்கு வந்தது. ஒவ்வொரு தேசமும் தனது பாரம்பரிய சின்னத்தை பாதுகாக்க அக்கறை எடுக்கும் என்று தமிழக பா.ஜ. தலைவர் கூறியுள்ளார்.
பூம்புகாரை கடலுக்குள் அகழ்வாராய்ச்சி செய்து கண்டு பிடிக்க முனைந்தால் எப்படி பாராட்டத்தக்கதோ, துவாரகை நகரை கடலுக்குள் இருந்து கண்டெடுக்க நடைபெறும் முயற்சி எந்த அளவு பாராட்டுக்குரியதோ அதுபோலவே கோடிக்கணக்கான மக்கள் நம்பும் ராமர் பாலத்தை பாதுகாப்பதும் ஒரு பெருமையான செயல். இது மதவெறி அல்ல. பாரம்பரிய சின்னத்தின் மீது பெருமிதம். அதை பாதுகாக்க ஆர்வம் என இல.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.