Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்களாகப் பிறந்தவர்கள் கடைகளை அடைத்துள்ளனர் : முதலமைச்சர்!

தமிழர்களாகப் பிறந்தவர்கள் கடைகளை அடைத்துள்ளனர் : முதலமைச்சர்!

Webdunia

, திங்கள், 1 அக்டோபர் 2007 (15:34 IST)
தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும், தமிழர்களாகப் பிறந்தவர்கள் தாங்களாகக் கடைகளை அடைத்துள்ளனர் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக இன்று நடந்துவரும் உண்ணாவிரதத்தைச் சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இதற்கிடையில் திமுக கூட்டணியின் இந்தப் போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

உடல்நலக் குறைவினால் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து இடையில் புறப்பட்ட முதலமைச்சரிடம், உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்துச் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர்.

அதற்கு அவர், "அது தொடர்பாக நான் கூற எதுவும் இல்லை" என்றார்.

பிறகு முதலமைச்சர் கருணாநிதி அலுவல் நிமித்தமாக தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அவரிடம் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டஉள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், "உங்களுக்கு வேண்டுமானால் அப்படியிருக்கலாம், எங்களுக்கு அல்ல" என்றார்.

"தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல ஓடுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தமிழர்களாகப் பிறந்தவர்கள் தாங்களாகக் கடைகளை அடைத்துள்ளனர்" என்றும் முதல்வர் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கடைபிடித்துவருவது பற்றிக் கேட்டதற்கு, "உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவுகளை நாங்கள் முழுமையாகப் பின்பற்றி வருகிறோம். உண்ணாவிரதத்திற்கு எதிராக யாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உண்ணாவிரதம் நடத்தக் கூடாது என்று குறிப்பிடப்படவில்லை" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil