சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக்கோரி சென்னை மைலாப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று மாலை நடைபெற உள்ள இப்பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான கணரணாநிதி உரையாற்றுகிறார்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை மயிலை மாங்கொல்லையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது.
பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி பேசுகிறார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்ïனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எல்.கணேசன் எம்.பி., இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், லட்சிய தி.மு.க. பொதுச்செயலாளர் விஜய டி.ராஜேந்தர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.