Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ஆம் தேதி மெட்ரிகுலேசன் வினா புத்தகம்: கல்வித்துறை அதிகாரி!

Advertiesment
10ஆம் தேதி மெட்ரிகுலேசன் வினா புத்தகம்: கல்வித்துறை அதிகாரி!

Webdunia

, சனி, 29 செப்டம்பர் 2007 (12:56 IST)
அக்டோபர் 10ஆம் தேதி முதலமெட்ரிகுலேசன் 10ஆம் வகுப்பு வினா புத்தகங்கள் கிடைக்கும் என்று தமிழக கல்வித்துறை அதிகாரி கூறினார்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பல வருடங்களாக 10ஆம் வகுப்பு, மெட்ரிகுலேசன், பிளஸ் 2 ஆகிய தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வசதியாக அரசு பொதுத் தேர்வில் கேட்க வாய்ப்பு உள்ள அனைத்து கேள்விகள் அடங்கிய புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது.

ஆண்டுதோறும் இந்த புத்தகங்களை மாணவர்கள் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். ஆசிரியர்கள் பெரும்பாலும் பாடங்கள் நடத்தி முடித்து அவற்றை ரிவிசன் நடத்துவது ஜனவரி மாதத்திற்கு பிறகுதான். அதனால் அப்போதுதான் இந்த வினா புத்தகங்கள் மாணவர்களுக்கு தேவைப்படும்.

மெட்ரிகுலேசன் வினா புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் அந்த புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளதாக கல்வித்துறை அதிகாரி கூறினார்.

தற்போது 10ஆம் வகுப்பு ஆங்கில மற்றும் தமிழ் வழியில் உள்ள அத்தனை வினா புத்தகங்களும் கிடைக்கிறது. பிளஸ்2 கணிதம், கணிதம் தீர்வு புத்தகம், வகைப்படுத்தப்பட்ட வினாக்கள் அடங்கிய கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய வினா புத்தகங்கள் கிடைக்கிறது. பிளஸ் 2 வகுப்புக்கு உரிய மற்ற வினா புத்தகங்கள் 20ஆம் தேதிக்கு மேல் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil