தமிழக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சி கூறி வருவதற்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக 10 காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அக்கட்சி கோருவது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
ராமர் பாலம் பிரச்சினை முடிந்துவிட்டது என்று கூறிய கருணாநிதி, வரும் 1ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு அரசு நடத்துவது அல்ல என்றும், அது திமுக கூட்டணிக் கட்சிகள் எடுத்த முடிவு என்று கூறினார்.
முழு அடைப்பு அமைதியாக நடைபெறும் என்றும், முழு அடைப்பின்போது முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.