அக்டோபர் 1ஆம் தேதி இந்திய தொழிற்சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) ஆட்டோக்கள் ஓடாது என்று மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி நடத்தப்படும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் பங்கேற்கும். அன்று சங்க தொழிலாளர்களின் ஆட்டோக்கள் தமிழகம் முழுவதும் ஓடாது என்று சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் முழுமையாக கலந்து கொள்கிறது. எங்கள் சங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்ளும் முறை சாரா தொழிலாளர்களும் முழு வேலை நிறுத்தத்தில் பங்கு எடுக்கிறார்கள் என்ற சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் சவுந்திரராஜன் உறுதிபட கூறியுள்ளார்.