Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌க்.1 முழு அடை‌ப்‌பி‌ற்கு தடை‌‌யி‌ல்லை : உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

அ‌க்.1 முழு அடை‌ப்‌பி‌ற்கு  தடை‌‌யி‌ல்லை : உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia

, வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (14:53 IST)
சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌‌விரைவாக முடி‌க்க‌க்கோ‌ரி ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி சா‌ர்பி‌ல் வரு‌கிற 1ஆமதேதி நடத்திட்டமிடப்பட்டுள்ள முழு அடை‌ப்‌பி‌ற்கு‌த் தடை‌‌யி‌ல்லை என்று சென்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது!

அ‌ன்று வ‌ன்முறைக‌ள் நட‌க்காம‌ல் தடு‌க்கவு‌ம், போ‌க்குவர‌த்‌தி‌ற்கு பா‌தி‌ப்பு ஏ‌ற்படாமலு‌ம் தடு‌க்க‌ தேவையான மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கைகளை எடு‌க்குமாறு த‌மிழக அர‌சை நீதிமன்றம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

அ.தி.மு.க. அவைததலைவரமதுசூதனன் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கலசெய்துள்மனுவில், “சேதசமுத்திதிட்டமதொடர்பாவழக்கு உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌‌த்தி‌ல் நிலுவையிலஉள்நிலையில், ஆளுங்கட்சியமுழஅடைப்பு நடத்துவதஉச்நீதிமன்தீர்ப்புக்கஎதிரானது. முழு அடை‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளத‌ன் மூல‌ம் நீதிமன்றத்துக்கஎதிராதி.மு.க. கூட்டணி கட்சிகளசெயல்படு‌கி‌ன்றன” என்று கூறியிருந்தார்.

இ‌ந்த வழ‌க்கு தலைமை‌ நீ‌திப‌தி ஏ‌.பி.ஷா, ‌நீ‌திப‌தி ஜோ‌திம‌‌ணி ஆ‌கியோ‌ர் அட‌ங்‌கிய முத‌ல் அமர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

அ‌ப்போது, தமிழக அர‌சி‌ன் தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் ‌விடுதலை, மு‌ழு அடை‌ப்ப‌ன்று எடு‌க்க‌ப்ப‌ட உ‌ள்ள மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி த‌மிழக அர‌சி‌ன் தலைமை‌ச் செயலாள‌ர் எ‌ல்.கே.‌தி‌ரிபா‌தி வழ‌ங்‌கிய ‌விள‌க்க அ‌றி‌க்கையை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர்.

அ‌ந்த ‌விள‌க்க அ‌றி‌க்கையை ஏ‌ற்று‌க்கொ‌ண்ட ‌நீ‌திப‌திக‌ள், முழு அடை‌ப்‌பி‌ற்கு‌த் தடை‌வி‌தி‌க்க மறு‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர். மேலு‌ம், அ‌ன்று பேரு‌ந்து, ர‌யி‌ல் போ‌க்குவர‌த்‌தி‌ற்கு‌த் தடை ஏ‌ற்படாம‌‌ல் இரு‌க்க‌த் தேவையான நடவடி‌க்கைகளையு‌ம், வ‌ன்முறை நட‌க்காம‌ல் தடு‌க்க‌ மு‌‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கைகளையு‌ம் எடு‌க்குமாறு த‌மிழக அர‌சி‌ற்கு உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil