வரும் 1ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு காரணமாக பள்ளி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1-10-07 (திங்கள்) அன்று அறிவிக்கப்பட்டுள்ள 'முழு அடைப்பு' காரணமாக நடைபெற்று வருகின்ற செப்டம்பர், அக்டோபர் 2007, மேல் நிலை தேர்வுகளில் 1.10.07 அன்று நடைபெற வேண்டிய பாடங்களுக்கான தேர்வுகள் 4.10.07 அன்று நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
3.10.07 அன்று நடைபெற வேண்டிய தேர்வுகளில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.