தமிழக அமைச்சர்கள் சுப. தங்கவேலன், ஐ. பெரியசாமி ஆகியோரின் அமைச்சரவைப் பொறுப்புக்கள் மாற்றப்பட்டுள்ளது!
இதுகுறித்து தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கையெழுத்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இதுவரை அமைச்சர் சுப. தங்வேலினிடம் இருந்த வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு ஆகிய துறைகள், வருவாய்த்துறை மற்றும் சிறைத்துறையின் அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமியிடம் மாற்றப்பட்டு்ள்ளதெனவும், அமைச்சர் சுப. தங்கவேலனிடம் குடிசை மாற்று, குடியிருப்புக் கட்டுப்பாடு ஆகிய துறைகள் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சரெனவும், சுப. தங்கவேலன், குடிசை மாற்று மற்றும் குடியிருப்புக் கட்டுப்பாடு துறைகள் அமைச்சரெனவும் அழைக்கப்படுவர் என்று ஆளுநர் மாளிகை அறிவிக்கை கூறியுள்ளது.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.