ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் எதற்காக, யாரை எதிர்த்து தி.மு.க. முழு அடைப்பு நடத்துகிறது என்று பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது!
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "மத்திய அரசில் தி.மு.க. பங்கு வகிக்கிறது, ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே அவர்கள் எதனை எதிர்த்து முழு அடைப்பு நடத்துகிறார்கள். உச்ச நீதிமன்றத்தையா? அல்லது மத்திய அரசையா?" என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அலுவலகங்கள் மீது நடந்த தாக்குதல்களைக் கண்டிப்பதாகக் கூறிய வெங்கையா நாயடு, இப்படிப்பட்ட தாக்குதல்களை சமாளிக்கக்கூடிய அரசியல் பலம் பா.ஜ.க.விற்கு உண்டு என்று கூறினார்.