Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேது சமுத்திர திட்டம்: தமிழகத்தில் அக்.1ல் முழு வேலை நிறுத்தம்

Advertiesment
சேது சமுத்திர திட்டம்: தமிழகத்தில் அக்.1ல் முழு வேலை நிறுத்தம்

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (10:36 IST)
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த, திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேது சமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், அக்டோபர் 1ம் தேதி ஒருநாள் முழு வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்தவும், அதற்கு முதல் நாள் (செப்டம்பர் 30ம் தேதி) சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்துவது எனவும் இதில் முடிவு செய்யப்பட்டது.

கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய ராம்விலாஸ் வேதாந்தி மீது குற்றப்பிரிவு சட்ட அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பொருளாளர் டி.சுதர்சனம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil