கருவூலத் துறை விரைவில் மின்னணு நிர்வாகமாக மாறும் என்று தமிழக கருவூலத் துறை சிறப்பு ஆணையர் கூறினார்.
தமிழக கருவூலத் துறை சிறப்பு ஆணையர் குத்சியர்காந்த் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கருவூல கணக்குத் துறையில் மின்னணு நிர்வாகம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தேனி, கரூர் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் ஆகியவற்றில் இணயை வழி முலம் சம்பள பட்டியல் மற்றும் செலவினங்கள் நிர்வகிக்கும் முறை பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருவூலத் துறையில் சுமார் 700 பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு தேர்வு மூலம் இந்த காலியிங்களை நிரப்புமாறு தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.