ரயில்வேத் துறையினரால் 2006ஆம் ஆண்டில் மட்டும் 10.28 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 23வது ரயில்வே பாதுகாப்பு படையின் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.
இதில் திருச்சி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ராமசுப்பு பேசுகையில், திருச்சி கோட்டத்தில் 20 விரைவு ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணி மேற்கொள்வதால் இதுவரை கொள்ளை, வழிப்பறி போன்றவை தொடர்பாக எந்த புகாரும் இல்லை.
திருச்சி, விழுப்புரம், விருதாச்சலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி ஆகிய 7 ரயில் நிலையங்கள் மாதிரி நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில்வேத் துறையினரால் 2006ஆம் ஆண்டில் மட்டும் 6,101 பேர்களிடம் இருந்து 10,28,750 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.