அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்ட தனது மகள் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருப்பதாகவும், தனது மருமகன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி பாலக்கரையை சேர்ந்த செபாஸ்டின், கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது மகள் ஸ்மாலின் ஜெனிட்டா எம்.பி.ஏ. படித்தவர். அவரை காட்டூரைச் சேர்ந்த கிறிஸ்டி டேனியலுக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும், அவர்கள் பின்னர் அமெரிககா சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது தனது மகள் கார் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இதனை வேண்டுமென்றே தனது மருமகன் தங்களிடம் மறைத்திருப்பாகவும் அவர் கூறியுள்ளார்.
விபத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ள செபாஸ்டின், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், புகார் நகலை அனுப்பியுள்ளார்.