அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தார்.
நேற்று சர்க்கார்பாளையத்தில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டட்ப பணிகளை ஆய்வு செய்தார்.
கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதன்பிறகு முதலமைச்சர் வரும் 29ஆம் தேதி பங்கேற்கும் அரசு விழா நடைபெறும் உழவர் சந்தை திடலை பார்வையிட்டார்.