திருச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தாக்கிப் பேசிய வேதாந்தி உருவ பொம்மையை திமுகவினரும், விடுதலை சிறுத்தையினரும் தீ வைத்து எரித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 23ஆம் தேதி காலை நடந்த இந்த போராட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், துணை மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே இடத்தில் விடுதலை சிறுத்தையினரும் வேதாந்தி உருவ பொம்மையை எரித்தனர்.