அரசே விரைவில் தொடங்கி நடத்தவிருக்கின்ற "அரசு கேபிள் கார்பரேஷன்'' ஆரம்ப மாகும்போது, அவர்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணப்படும் என்பதால், அமைதியைக் காப்பாற்றுமாறு அவர்கள் எல்லாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பழக்கத்தில் இருக்கும் ஒன்றை மாற்றி விட்டு அது என்ன தான் புதுமையாகவும், எளிமையாகவும், மலிவானதாகவும் இருந்தாலும், புதிதாக வேறொன்றை அறிமுகப்படுத்தும் போது ஏற்கனவே பழகி விட்ட பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு அளிப்பதென்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஓலை வேய்ந்த வீட்டுக் கூரையை மாற்றிட முனை யும் போது கூட அது மாற்றிய மைக்கப்படும் வரையில் கூரை விழுந்து விடாமல் பாதுகாத்திட தற்காலிக ஏற்பாடாக ஒரு முட்டுக்கொடுத்து வைக்கிறோம். பின்னர் தான் ஓலை வேய்ந்திருந்த வீட்டை ஓட்டு வில்லை வீடாக மாற்றி அமைக்கிறோம். இது வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் சில பிரச்சினைகளில் பொருந்தக்கூடியதும், தேவைப்படுவது மாகும் என முதல்வர் கூறியுள்ளார்.
ஏற்கனவே கேபிள் டி.வி. தொழில் நடத்தியோரின் குடும்பங்கள் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட வற்றையும், அவர்களைச் சார்ந்து அந்தத் தொழிலே ஈடுபட்டுள்ள லட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விடக்கூடாது என்பதிலே இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது என்பதையும், அவர்களைப் பாதுகாக்கும் கடமையை முறையாகச் செய்யும் என்று அவர்களுக்கு, அவர்களது மாநாட்டில் வழங்கியுள்ள உறுதியையும் மறந்து விட முடியாது என்று கருணாநிதி நினைவுபடுத்தியுள்ளார்.
எனவே இந்தப் பிரச்சினையில் சுமுகமான முடிவு காணவும், பொதுமக்களுக்கு சிறிதளவு கூட சங்கடம் ஏற்படாத நிலையை உருவாக் கவும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் கருத்துக்களை அறிந்து கொள்ளவும், அதன் மீது அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள் ளவும், அவர்களின் பிரதிநிதிகளை இன்று அழைத்துப் பேசப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்.
அரசே விரைவில் தொடங்கி நடத்தவிருக்கின்ற "அரசு கேபிள் கார்பரேஷன்'' ஆரம்ப மாகும்போது, அவர்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணப்படும் என்பதால், அமைதியைக் காப்பாற்றுமாறு அவர்கள் எல்லாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே அரசியல் ஆதாயம் பெற முனைகின்ற வர்களின் முயற்சிகளுக்கு பலியாகி விடக்கூடாது என்று பாதிக்கப்பட்டுள்ள அனை வருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.