Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை அழித்துவிட முடியாது: கருணா‌நி‌தி!

என்னை அழித்துவிட முடியாது: கருணா‌நி‌தி!

Webdunia

, ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (15:20 IST)
''உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்துவிட முடியாது'' எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌‌றினா‌ர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி பே‌சுகை‌யி‌ல், நான் பொறுப்பிலே இருந்த காரணத்தால் உங்களுக்காக செய்த உதவிகளுக்காக நீங்கள் செலுத்துகிற நன்றிதான் இந்த மாநா‌‌ட்டின் மூலமாக அமைந்திருக்கிறது. அதைத்தான் நான் பாராட்ட வந்துள்ளேன். ஏன் பாராட்ட வேண்டும் என்றால் நன்றி தமிழ்நாட்டிலே மிக ஆபூர்வமான ஒன்றாக உள்ளது. நன்றாக பாராட்ட கடமைப்பட்டவன் என்ற முறையில் நீங்கள் காட்டுகிற நன்றியை உங்களுக்காக இந்த அரசு செய்த உதவிகளை மறக்காமல் நீங்கள் காட்டுகிற நன்றியை பாராட்ட நான் இங்கு வந்திருக்கிறேன் எ‌ன்றா‌ர்.

இந்த மாநாட்டிற்கு கருணாநிதி ஒருவேளை தலையோடு வருவாரா? இல்லை தலை இல்லாமல் வருவாரா? என்று சந்தேகத்தோடு அமர்ந்திருப்பீர்கள். தலை என்பது தலைக்கு மேல் உள்ள பகுதி மாத்திரம் அல்ல. தலை என்பது ஒருவருடைய முகவரி. தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி தமிழ்நாட்டை விட்டு என்றைக்கும் போகாது. தமிழ் இலக்கியத்தை விட்டுப் போகாது எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

இலக்கியத்தில் கலைத்துறையில், அரசியல் துறையில் எனது முகவரி இடம்பெற்றிருக்கிறது. பெரியார், அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் நாட்குறிப்புகளில் எனது முகவரி இருக்கிறது. ஏன் உங்கள் நாட்குறிப்பிலும் எனது முகவரி இருக்கிறது. ஆகவே என்னுடைய முகம் மறைந்து போய்விடும். தலை காணாமல் போய்விடும் என்று நம்ப வேண்டாம். தமிழ்நாட்டில் கருணாநிதி ஆற்றி இருக்கிற தொண்டுகளை, தியாகங்களை எல்லாம் எண்ணிப் பார்த்தால் தலையே போய்விட்டாலும் கூட இந்திய தபால் தலையில் இந்த தலை இடம் பெற்றே தீரும் எ‌ன்று உறு‌தி‌ப்பட கூ‌றினா‌ர்.

தலையை கொய்து வா என்று சொல்லுகிற நல்ல நண்பர்களை பாராட்டுகிறேன். எனது நாக்கை அறுத்துக்கொண்டு வந்துவிட்டால் அவர்களுக்கு தங்கத்தால் பரிசு அளிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு விலை பாருங்கள். எவ்வளவு விலை உயர்ந்தது இந்த தலை? இந்த நாக்கு? சாதாரண நாக்கா? அண்ணாவின் தமிழை பேசிய நாக்கு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை உச்சரித்த நாக்கு. சிலப்பதிகாரத்தை, திருக்குறளை படித்த நாக்கு எ‌ன்று கருணா‌நி‌தி பெருமையுட‌ன் கூ‌றினா‌ர்.

இ‌ந்த நாக்குக்கும், தலைக்கும் இவ்வளவு விலை. அதற்கு தங்கமாகத்தான் கொட்டிக் கொடுப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு ஒருவர் வடக்கிலே பேசி இருக்கிறார் என்றால் அவரை நான் வாழ்த்துகிறேன். அவர் தரித்திர நாராயணராக இருக்க முடியாது. சீமானாகத்தான் இருக்க வேண்டும். அவரை வாழ்த்துகிறேன். முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். லட்சியத்திற்காக எத்தனை பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். லட்சியத்திற்காக எத்தனை பேர் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் எரிக்கப்பட்டிருக்கிறார்கள் எ‌ன்று முத‌ல்வ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த மண்ணிலே சாய்ந்த மாவீரர்களுடைய கணக்கு நமக்கு தெரியாதா? அவர்களுடைய வரலாறு தெரியாதா? அந்த வரலாற்றை எல்லாம் படித்துத்தான் ஒரு வரலாற்றை உருவாக்குகிற இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே, யாரும் பயப்படத் தேவையில்லை. அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்கள் ரத்தத்திலே தான் கலந்து இருப்பேன். உங்கள் நெஞ்ச துடிப்பிலே தான் கலந்திருப்பேன். உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்துவிட முடியாது எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil