சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்திலிருந்து கொழும்பிற்கு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்களை அவர்களது படகுகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா விடுதலை செய்தது. அதற்குப் பதிலாக இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.