''தேவைப்பட்டால் டி.டி.எச். சேவையை அரசே தொடங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும்'' என்று தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி கூறினார்.
தமிழக அரசு கேபிள் டி.வி. கழகம் சென்னையில் எம்.எஸ்.ஓ.வாகவும், மற்ற மாவட்டங்களில் கேபிள் டி.வி. ஆபரேட்டராகவும் செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் எதுவும் இயற்ற தேவையில்லை. இது விரைவில் செயல்படத் தொடங்கும் என்று திரிபாதி தெரிவித்தார்.
டி.டி.எச். என்ற வீடுகளுக்கு நேரடி இணைப்பு கொடுக்கும் வசதியை ஏற்கனவே டாடா போன்ற ஒரு சில நிறுவனங்கள் செய்து வருகிறது. இப்போது மேலும் ஒரு நிறுவனம் (சன் டி.வி.) இதில் புதிதாக வந்துள்ளது. இது தமிழக அரசின் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனை பாதிக்காது. நாங்கள் அனைத்து தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு தயாராக இருக்கிறோம். தேவை என்றால் டி.டி.எச். வசதியை கொண்டுவருவது குறித்தும் பரிசீலிப்போம் என தலைமை செயலாளர் திரிபாதி கூறினார்.