காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் காவேரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகி்றது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரிக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.13 அடியாக இருந்து. இது அணையின் முழு கொள்ளவு 120 அடியை விட அதிகம்.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,295 கன அடியாக இருக்கின்றது. அணையில் இருந்து வினாடிக்கு 21,674 கனஅடி திறந்து விடப்படுகிறது.