சேலம் அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவில், சேலம் கந்தம்பட்டியில் உள்ள திரவுபுதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது தொடர்பாக எங்கள் கட்சியின் சேலம் நகரச் செயலாளர் இமய வரம்பன் போலீசில் அனுமதி கேட்டார். ஆனால் முறையான அனுமதி வழங்கவில்லை. கோவில் கதவை மூடி சீல் வைத்து விட்டனர்.
எனவே கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும். கோயில் கதவை திறக்க வேண்டி கண்டன ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.