தமிழக பேருந்து எரிப்பு சம்பவத்தால் கடந்த 2 நாட்களாக இரு மாநிலங்களில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகள். இரு மாநில அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப பின் காவல்துறையின் பாதுகாப்புடன் பெங்களூருக்கு மீண்டும் இயக்கப்படுகிறது!
பெங்களூரில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீடடில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசியது. இதேபோல் ஓசூர் அருகே உள்ள பொம்மனந்ஹள்ளி என்ற இடத்தில் தமிழக அரசு பேருந்து ஒன்றை மர்ம கும்பல் தீயிட்டு கொழுத்தியது. இதில் 2 பேர் உயிரோடு எரிந்து பலியாயினர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல், தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன. எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிகளும் மீண்டும் அங்கு செல்லத் தொடங்கின.
இதேபோல் பெங்களூரிவில் இருந்து தமிழகத்து வரும் அம்மாநில பேருந்துகளும் நேற்று முதல் தங்கள் வழக்கமான சேவையை துவக்கின. காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.