சேலம் ரயில்வே கோட்டத்தை நவம்பர் மாதத்தில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறினார்.
முதலமைச்சர் கருணாநிதியை மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஆகியோர் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர்.
பின்னர் அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் ரயில்வே கோட்டம் அமைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்டது. நவம்பர் மாதம் முதல் வாரம் ரயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் தலைமையில் இதற்கான விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் கருணாநிதி புதிய ரயில்வே கோட்டத்தை துவக்கி வைக்கிறார் என்றார்.
மத்திய அமைச்சர் அன்புமணி கூறுகையில், பயிற்சி டாக்டர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவது குறித்து முதல்வரிடம் விவாதித்தேன். இதுபற்றி மாணவர்களிடம் இருக்கும் அச்சத்தை போக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார் என்றார்.