குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் மற்றும் அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் இன்று பலத்த மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது.
ஐந்தருவி, புலியருவி, தேனருவி, செண்பகாதேவி ஆகிய அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீசன் முடிந்த பிறகும் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.