தமிழகத்துக்கு வறட்சி நிதியாக மத்திய அரசு ரூ.3.42 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வறட்சி பகுதிகள் திட்டத்தின் கீழ் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு சுமார் ரூ.3.42 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், சிவகாசி, வெம்பக் கோட்டை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் 16 திட்டங்களுக்கு 2ம் கட்ட தவணையாக ரூ,107.72 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 14 திட்டப் பணிகளுக்கு ரூ.47 லட்சமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 திட்டப் பணிகளுக்காக ரூ.107.52 லட்சமும், கோவை மாவட்டத்தில் 12 திட்டப் பணிகளுக்காக ரூ.79.99 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி தேசிய குடிநீர் இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பணிகளுக்காக 2வது கட்ட தவணையாக ரூ.3.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.