Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் சுற்றுலா அமைப்பாளர்கள் கருத்தரங்கு!

சென்னையில் சுற்றுலா அமைப்பாளர்கள் கருத்தரங்கு!

Webdunia

, புதன், 19 செப்டம்பர் 2007 (13:28 IST)
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகளவு கவருவதற்காக, தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகமும், இந்திய சுற்றுலா அமைப்பாளர்கள் கருத்தரங்கை சென்னையில் நடத்த உள்ளது!

இந்த கருத்தரங்கு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும். இந்த கருத்தரங்கு குறித்து தமிழக சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குநர் டாக்டர். எம். ராஜாராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

இந்த மூன்று நாள் கருத்தரங்கில் வெளிநாடு மற்றும் உள் நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஆதரவுடன் செட்டிநாடு சுற்றுலா, உலக பாராம்பரிய மையங்கள், ஆதி சங்கரர் திருத்தலங்கள், நவகிரக திருத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் சுற்றுலா திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது. சென்ற வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், கோவை மற்றம் மதுரையில் சர்வதேச தரத்தில் உயர்தரமான நவீன மருத்துவ மனைகள் இருக்கின்றன. இதனால் மருத்துவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகளவு கவரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கின்றது. கிழக்கு இந்தியாவில், குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil