நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று துவங்கியது. நாளை நடக்கும் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று 3 மணிக்கு துவங்கியது. மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்திற்கான மேலிடப் பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து நாளை நடக்கும் கூட்டத்தில் முன்னாள் துணைத் தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் சென்னை வருகிறார். விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர் காரில் நெல்லை வருகிறார். பாளை கே.டி.சி.நகர் மகராசி மகாலில் நடைபெறும் பொதுக்குழுவில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அத்வானியின் வருகையையொட்டி நெல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.