தமிழகத்தில் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் உறுதிப்படக் கூறினார்.
பெரியாரின் முக்கியக் கொள்கைகளில் பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதும் ஒன்று. அதனடிப்படையில் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும் என்று வரதராஜன் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின் அடித்தளமாக மத நல்லிணக்கம் விளங்குகிறது. பெரியாரின் பிறந்த தினத்தில் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதி எடுத்துக் கொள்வதாக வரதராஜன் கூறினார்.