மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய, பேருந்து நிறுத்தங்களிலேயே பயணிகள் டிக்கெட் வாங்கி கொள்ளும் வசதியை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்கிறது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து வரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை நகரில் தினமும் இயக்கப்படும் 2,690 மாநகர பயணம் செய்கின்றனர். 17ஆம் தேதி முதல் புதிதாக இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பேருந்துகளின் எண்ணிக்கையினை 3000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் கருணாநிதியின் சமீபத்திய அறிவிப்பான, மாநகர பஸ்களின் சேவையினை 40 கி.மீ தூரத்தில் இருந்து 50 கி.மீ. தூரம் வரை நீட்டித்துள்ளதால் புதிதாக 44 தடங்களில் 97 புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தூர நீட்டிப்பால் மட்டும் மாநகரப் பேருந்துகளில் சுமார் 157 கிராமங்களை சேர்ந்த 4 லட்சம் மக்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் பேருந்துகள் இன்னும் அதிக கிராமப் புறங்களுக்கு விடப்பட உள்ளன. 50 கி.மீ. தூரம் இயக்கப்படுகின்ற பேருந்துகளிலும் இலவச மற்றும் சலுகை பயணச் சீட்டை பயன்படுத்தி மாணவர்கள் பயணம் செய்ய ஏதுவாக தற்போது 14 வழித்தடங்களில் 27 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் அதிகம் நிற்கும் பேருந்து நிறுத்தங்களான குரோம்பேட்டை, பல்லாவரம். கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், காந்தி மண்டபம், கோட்டூர்புரம், எழிலகம், கண்ணகி சிலை, அரசு பொது மருத்துவமனை (சென்டிரல்), பூங்கா பஸ் நிலையம், கடற்கரை பஸ் நிலையம், எல்.ஐ.சி., டி.எம்.எஸ், எஸ்.ஐ.ஈ.டி., சைதாப்பேட்டை பாலம், ஜெமினி, ஸ்டர்லிங் ரோடு, எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய 18 பேருந்து நிறுத்தங்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க வசதியாக விற்பனை கவுண்ட்டர்கள் அமைத்து நிலை நடத்துனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.