இலங்கை தமிழர்களுக்கு ரூ.6 லட்சம் உதவி!
திருச்சி செய்தியாளர்
இலங்கை தமிழர்களின் உயர் கல்விக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை தமிழர்களை ஆளுமைத்திறன், கல்வித் திறன் பெற்றவர்களாக உருவாக்கும் வகையில் அகதிகளால் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் மூலம் இந்த ஆண்டு உயர்க் கல்விக்கான நிதியுதவி வழங்கும் விழா திருச்சி பொன்னகரில் நடைபெற்றது. அப்போது மருத்துவம், பொறியியல் உள்பட பல்வேறு பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், உப தலைவர் கந்தவேல் மற்றும் பத்மநாபன், ரவீந்திரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.