தலைமை ஆசிரியருக்கு குடியரசுத் தலைவர் விருது!
திருச்சி செய்தியாளர்
திருச்சி பள்ளி தலைமையாசிரியருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.
திருச்சி அருகே உள்ள அதவத்தூர் திருத்துவ மான்ய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இரா. வைரவேலுவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதற்கான வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவை அடங்கிய தேசிய விருதை வழங்கி பாராட்டினார்.