32 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 400 இடங்களில் வரும் 19ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் கூறினார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைப்போம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதுபோல ஐகோர்ட் 4-11-2006ல் வழங்கிய தீர்ப்பையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று அப்துல் மஜீத் குற்றம்சாற்றினார்.
தொடக்க கல்வி நிர்வாகத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களின் சேமிப்பு நிதியில் கையாடல் நடந்துள்ளதால் நிதி நிர்வாகத்தை தலைமை கணக்காயரிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன் எங்களின் 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் 400 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் கூறினார்.