தமிழகத்தில் இனி உள்ளாட்சித் தேர்தலுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறினார்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தலில் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதை வாக்காளர்கள் பெரிதும் வரவேற்றனர். இதனால் வாக்குப் பதிவின் போது காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன், அதிகாரிகளுக்கும் பணி எளிதாகிறது என சந்திரசேகரன் தெரிவித்தார்.
எனவே, வரும் காலங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கும் படிப்படியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி கூறினார்.