அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக நேற்று நீலகிரி மாவட்டம் கோட நாடு எஸ்டேட்டிற்கு சென்றார்.
அ.தி.மு..க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று 2.40 மணிக்கு கோவை சென்றார். பின்னர் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்ட காரில் ஏறிச் சென்றார்.
விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்திருந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை பார்த்து வணங்கினர்.
பின்னர் கார் விமான நிலையத்தில் இருந்து காளப்பட்டி வழியாக சத்தி ரோட்டை அடைந்து மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து கோத்தகிரி வழியாக ஜெயலலிதா கோடநாடு சென்றார். அங்கு அவர் 10 நாள் ஓய்வெடுப்பார் என்று தெரிகிறது.