Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோட்டில் 70 சாயப்பட்டறைகளுக்கு சீல்

ஈரோடு செய்தியாளர் என். வேலுச்சாமி

Advertiesment
ஈரோட்டில் 70 சாயப்பட்டறைகளுக்கு சீல்

Webdunia

, ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (13:28 IST)
ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் 70 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ஜவுளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. ஜவுளி உற்பத்திக்கு தேவையான 670 சாயப்பட்டறை, 70 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அவை வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்காமல் பாசன கால்வாய்களில் கலக்கிறது. கழிவுநீரை தடுக்க கடந்த 1998ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாயப்பட்டறை வெளியேற்றும் கழிவுநீரை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் 2003ல் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. விவசாயிகள் சங்கமும் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வழக்கறிஞர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரியது. ஆய்வு அறிக்கையை குழு சமர்ப்பித்தது. இதையடுத்து சாயப்பட்டறை உரிமையாளர் தரப்பில், சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க அவகாசம் கோரப்பட்டது.

பின்னர் உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறியது. இதன் அடிப்படையில் ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சில சாய மற்றும் தோல் ஆலைகள் தாங்களாகவே உற்பத்தியை நிறுத்தின.

இந்நிலையில் பவானி அருகே காடையம்பட்டியில் திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள் ஒரே நாளில் 70 ஆலைகளுக்கு சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின் 125க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடிநடவடிக்கையால் சுற்றுசூழல் அமைப்பினர் திருப்தியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil