பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம்!
, புதன், 12 செப்டம்பர் 2007 (21:23 IST)
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து சென்னையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. 10 மீட்டர் தூரம் கடல் நீர் வெளியே வந்தது. இதனால் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர், பொது மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இதனிடையே சீனிவாசபுர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.சுனாமி பரபரப்பு காட்சிகள்!