தமிழக அரசு நேற்று பத்து உயர் காவல்துறை அதிகாரிகள் பதவியில் இருந்து அதிரடி மாற்றங்கள் செய்து உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் வகித்து வந்த பழைய பதவி அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
விபாகர் சர்மா -சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி.)
என்.பாலச்சந்திரன் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. (தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.)
கே.துக்கையாண்டி- லஞ்சம் ஒழிப்பு பிரிவு ஐ.ஜி. (பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.)
ஜி.உமாகணபதி சாஸ்திரி- பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. (லஞ்சம் ஒழிப்பு ஐ.ஜி.)
விஜயகுமார் - பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யான இவர் விடுமுறையில் செல்கிறார்.
எம்.என்.மஞ்சுநாதா- நெல்லை நகர போலீஸ் கமிஷனர் (கோவை சரக டி.ஐ.ஜி.)
சீமா அகர்வால் - கோவை சரக டி.ஐ.ஜி. (சென்னை தலைமையக நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி.)
ராஜீவ்குமார்- ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. (சென்னை தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.)
கே.பெரியய்யா - காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு (விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு)
ஏ.அமல்ராஜ் - விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு (காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு)