திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்துக்கு கூடுதலாக 6 முறை இயக்கப்படும் விமான சேவையை திருச்சி விமான நிலையை இயக்குனர் ஸ்ரீகுமார் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஏற்கனவே விமானம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, கூடுதலாக வாரத்துக்கு 6 முறை திருச்சி-சிங்கப்பூர் விமான சேவை தொடக்கப்பட்டுள்ளது என்றார்.
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு அக்டோபர் முதல் விமான சேவை தொடங்கும் என்று இயக்குனர் ஸ்ரீகுமார் கூறினார்.