கூவம் நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை சென்னைக்கு சாய்பாபா விரைவில் அனுப்ப உள்ளார். அவர்கள் கூவம் நதி முழுக்க சென்று ஆய்வு செய்வார்கள் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கூவம் நதியை சுத்தப்படுத்த உதவும்படி சத்ய சாய்பாபாவை கடந்த 9ஆம் தேதி நானும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவர் சாதகமான பதிலை அளித்தார். கூவம் நதியின் இரு கரைகளையும் உயர்த்தி கட்டி தரவும் சம்மதித்துள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கூவம் நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை சென்னைக்கு சாய்பாபா விரைவில் அனுப்ப உள்ளார். அவர்கள் கூவம் நதி முழுக்க சென்று ஆய்வு செய்வார்கள். பிறகு கூவம் நதியை சுத்தப்படுத்தி, கரைகளை உயர்த்த எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பீடு செய்வார்கள். அதன் பிறகே கூவத்தை சுத்தப்படுத்த எத்தனை கோடி ரூபாய் தேவைப்படும் என்பது தெரியவரும் என்றார் துரைமுருகன்.