மருத்துவ மாணவர்களின் சேவை மக்களுக்கு மிகுந்த 'தேவையாக உள்ளது. இப் பணியை மாணவர்கள் புனிதமாக கருத வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், தற்போது மருத்துவம் பயில மாணவர்கள் தயங்குவதாக கூறுகின்றனர். ஆனால் மற்ற துறைகளில் குறிப்பிட்ட அளவிற்குத்தான் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் மருத்துவப் பணி மகத்தானது. பிறப்பு முதல் இறப்பு வரை மருத்துவர் துணையின்றி யாரும் வாழ்ந்து விட முடியாது என்றார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேவை மக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த தேவையாக உள்ளது. இப்பணியை புனிதமாக நினைக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் கூடிய நல்ல மருத்துவர்களை, செவிலியர்களை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.