மாணவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும் திட்டம் அனைத்தும் பள்ளிக்கும் அக்டோபர் முதல் விரிவுப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
ஆசிரியர் பயிற்சிக்கான புதிய பாடத் திட்டத்தின் வரைவு அறிக்கை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரும். பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும் திட்டம் அனைத்தும் பள்ளிக்கும் அக்டோபர் முதல் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிப்பும் இனிக்கும் திட்டத்தை மேம்படுத்தி செயல்வழி கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு இதை விரிவபுடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கு விரிவபுடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் வெற்றி பெற்றுள்ள செயல் வழிக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்காக செயல்வழிக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.