மூன்று ஆண்டு பி.எல். படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. வரும் 14ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.
அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு பி.எல். படிப்புக்கு ஏற்கனவே மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 3 ஆண்டு பி.எல். படிப்பில் 1182 இடங்கள் உள்ளன. இதற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதியான 6 ஆயிரத்து 811 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடந்த வாரம் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு 1182 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 300 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு துணைவேந்தர் எஸ்.சச்சிதானந்தம், மாணவர்கள் தேர்ந்தெடுத்த இடத்துக்கான உத்தரவை வழங்கினார்.