கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் கூறினர்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் அனைத்தும் தயாராகி விட்டன. இன்னும் 10 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது. தேர்வு மிகவும் கவனமாக, எந்த தவறுகளும் நடைபெறாத வகையில் நேர்த்தியாக, நேர்மையாக நடத்தப்பட்டது. எந்த குறுக்கு வழியிலும் யாரும் வரமுடியாது என்று அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ச.சேவியர் ஜேசு ராஜா, சி.டி.திலகவதி ஆகியோர் தெரிவித்தனர்.
பணி நியமனத்துக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அப்படியே பணம் கொடுத்து இருந்தாலும் அவர்கள் வேலை கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்க வேண்டாம் என்று அவர்கள் கூறினர்.