மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மெட்ரிக் பள்ளிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன.
தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மெட்ரிக் பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பாடம் நடத்தலாம் என்ற அரசு உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும்.
காலதாமதம் செய்யாமல் மெட்ரிக் பள்ளிகள் நலவாரியம், நர்சரி பள்ளிகள் நலவாரியத்தை அமைக்க வேண்டும்.
மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டும்.
மத்திய அரசின் மனிதவள அமைச்சத்தின் பரிந்துரையை ஏற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.