5000 கிராம நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரை!
திருச்சி செய்தியாளர் ஆர்.சுப்பிரமணியன்
நாடு முழுவதும் 5000 கிராம நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைதுறை மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் இக் குழுவின் தலைவர் சுதர்சன் நாச்சியப்பன் கூறுகையில், மத்திய அரசின் சட்டம், நீதித்துறை ஆகிய அமைச்சகங்களுக்கான நிலைக் குழு சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளது என்றார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மீது புகார் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க பரிந்துரை செய்துள்ளோம். நாடு முழுவதும் 5000 கிராம நீதிமன்றங்களை ரூ.500 கோடியில் தொடங்க பரிந்துரைத்துள்ளோம். இவை நடமாடும் நீதிமன்றங்களாக செயல்படும் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.