ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த தேசிய திட்டம்: மத்திய அரசு!
திருச்சி செய்தியாளர் ஆர்.சுப்பிரமணியன்
ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த தேசிய புத்தாக்க திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை செயலர் டி.ராமசாமி திருச்சியில் கூறினார்.
ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த தேசிய புத்தாக்க திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதில் 10 லட்சம் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கப்படுவார்கள். இவர்களில் 10 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும். பிளஸ் 2 முதல் எச்.எஸ்சி வரையிலான மாணவர்கள் பயன்பெறலாம் என்று ராமசாமி தெரிவித்தார்.