உலக தரத்துக்கு ஐ.டி.ஐ.யை மேம்படுத்த நடவடிக்கை: ப.சிதம்பரம்!
திருச்சி செய்தியாளர் ஆர்.சுப்பிரமணியன்
உலகத்தரத்துக்கு 300 ஐ.டி.ஐ.யை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ப்பக கட்டிடத்தை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்து பேசுகையில், நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்துக்கு தொழில் நுட்ப வளர்ப்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் இவை 50 இடங்களில் உள்ளன. இதை 500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் 300 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்
விழாவில் என்.ஐ.டி. இயக்குனர் சிதம்பரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை செயலர் ராமசாமி, தமிழ்நாடு தொழில்துறை ஆணையர் ராஜூவ் ரஞ்சன், இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆலோசகர் மிட்டல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.