யாருடைய மிரட்டலுக்கும் பா.ம.க. பயப்படாது என்று கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
சமச்சீர் கல்வி முறை குறித்து முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது. நில மதிப்பீட்டு விலை உயர்வை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். இதற்காக ஆளும் கட்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. யாருடைய மிரட்டலுக்கும் பா.ம.க. பயப்படாது. தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தொடரும் என்றார் ஜி.கே.மணி.